நல்ல சோறு. சிறுதானிய உணவுகள்
-ராஜமுருகன்
உளுந்து களி
தேவையான பொருட்கள் :
நெல், அரிசி, சாமை அரிசி – 1/4 கிலோ
உளுத்தம் பருப்பு – 1/4 கிலோ
ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
கருப்பட்டி - 1 கோப்பை
செய்முறை
- இரண்டு அரிசி வகைகளையும் கழுவி காயவைத்து சிவக்க வறுக்கவும்.
- உளுந்தையும் சிவக்க வறுத்து, அரிசியுடன் சேர்த்து மாவாக அரைக்கவும்.
- கருப்பட்டியை 3 கோப்பை தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதிக்க விடவும். அதனுடன் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்க்கவும்.
- நன்கு கொதித்து வரும்போது அரைத்து வைத்துள்ள மாவை தூவி கட்டி இல்லாமல் கை விடாமல் கிளறவும்.
- ஒட்டாமல் வந்ததும் ஏலக்காய் பொடியை தூவி இறக்கவும்.
……………………………………………………………………………………………………………………………………………………
கஞ்சி
உளுத்தங் கஞ்சி
தேவையான பொருட்கள்
உளுந்து - 100 கிராம்
நாட்டுச் சர்க்கரை - 250 கிராம்
தேங்காய் பூ - 1/2 குவளை
ஏலக்காய் – 2 எண்ணிக்கை
முந்திரி - 3 எண்ணிக்கை
உப்பு - 1 சிட்டிகை
சுக்கு பொடி - 1 சிட்டிகை
செய்முறை
- உளுந்தையும், முந்திரியையும் இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஆட்டி எடுத்து அதனுடன் தேங்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
- 1 படி தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் உளுந்து கலவையை சேர்த்து கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்ததும் ஏலப்பொடி, சுக்குப்பொடி சேர்த்து பரிமாறவும். இது காலை தேனீர்க்குப் பதிலாக பயன்படுத்தலாம்.
……………………………………………………………………………………………………………………………………………………
சிற்றுண்டி
சாமை இட்லி
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி – 4 குவளை
உளுந்து – 1 குவளை
வெந்தயம் – 1 மேசைக்கரண்டி
ஆமணக்கு – 5 (தோல் நீக்கியது)
உப்பு – தேவையான அளவு
செய்முறை
- சாமை அரிசி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை தனியாக ஊற வைத்துக் கொள்ளவும். நன்கு ஊறிய பின் அரிசியை தனியாகவும், வெந்தயம், உளுந்து, ஆமணக்கு விதை இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- இவ்விரண்டு மாவையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 5 முதல் 6 மணி நேரம் புளிக்கவிடவும். பின் இட்லித் தட்டில் இட்டு அவிக்கவும்.
————————————————————————————————————————————————————
கொள்ளு தோசை
தேவையான பொருட்கள்:
கொள்ளு – 1 குவளை
நெல்அரிசி – 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
செய்முறை
- கொள்ளு, நெல்அரிசி, வெந்தயம், அனைத்தயும் ஊறவைத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- அரைத்த மாவுடன் உப்பு கலந்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.
- கடலை எண்ணெய் பயன்படுத்தலாம். மணமான கொள்ளு தோசை தயார்.
- நீரழிவு உள்ள நண்பர்களுக்கு ஏற்ற உணவு.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
தினை பால் பணியாரம்
தேவையான பொருட்கள்
தினை அரிசி - 2 ஆழாக்கு
உளுத்தம் பருப்பு - 2 ஆழாக்கு
பால் - 1 படி (லிட்டர்)
வெல்லம் - சிறிதளவு
ஏலக்காய் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொறிக்க
செய்முறை
- இரண்டு மணி நேரம் ஊறிய தினை அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் மிருதுவாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.
- காய்ந்த எண்ணெயில் மாவை சிறுசிறு உருண்டைகளாகப் போட்டு பொறித்தெடுக்கவும்.
- பாலை நன்கு சுண்டும்வரை காய்ச்சி அதனுடன் வெல்லம், ஏலக்காய்தூள் சேர்க்கவும்.
- பனியாரம் இளஞ்சூடாக இருக்கும்போதே பாலில் சேர்த்து ஊற வைக்கவும். அதிக நேரம் ஊறக்கூடாது.
……………………………………………………………………………………………………………………………………………………
திண்பண்டங்கள்
கம்பு வடைதேவையான பொருட்கள்
கம்பு - 1 குவளை
சின்ன வெங்காயம் - 1/4 குவளை (நறுக்கியது)
கருவேப்பிலை - 1 கைப்பிடி (நறுக்கியது)
கொத்தமல்லி - 1 கைப்பிடி (நறுக்கியது)
இஞ்சி - சிறுதுண்டு
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொறிப்பதற்கு
செய்முறை
- கம்பை 3 மணிநேரம் ஊறவிட்டு இஞ்சி, சோம்பு, பட்டை, மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக குறைந்த நீரில் அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த மாவுடன் வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
- விரும்பினால் கற்பூரவள்ளி இலையையும் சேர்த்துக்கொள்ளவும்.
…………………………………………………………………………………………………………………………….
இனிப்பு
தினை பாயாசம்
தேவையான பொருட்கள்
தினை அரிசி - 1/2 குவளை
வெல்லம் - 150 கிராம்
பால் - 3 கப்
நெய் - 200 மிலி
முந்திரி - 20 கிராம்
திராட்சை – 20 கிராம்
ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
சுக்குத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை
- தினை அரிசியை 100 மிலி நெய்விட்டு நன்கு வாசனை வரும்வரை வறுக்கவும். அதனுடன் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- வெல்லத்தை சிறிது நீருடன் கொதிக்கவிட்டு வடிகட்டி அதனுடன் சேர்க்கவும்.
- சிறிது நெய் சேர்த்துக் கொள்ளவும்.
- நன்கு வெந்தவுடன் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- இதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
- கடைசியாக ஏலக்காய்தூள், சுக்குத்தூள் சேர்த்து பரிமாறவும்.
- விரும்பினால் வறுத்த எள்ளை சேர்க்கலாம்.
…………………………………………………………………………………………………………………………….
சோறு
பனிவரகு காளான் சோறு
தேவையான பொருட்கள்
பனிவரகு - 1 குவளை
காளான் - 1/2 குவளை (நறுக்கியது)
கடலை எண்ணெய் – 3 மே.கரண்டி
ஏலக்காய் - 2 எண்ணிக்கை
பட்டை – சிறிது
கிராம்பு - 2எண்ணிக்கை
ஜாதிக்காய், ஜாதிபத்திரி - சிறிது
பட்டை, சோம்பு - 2 தே.கரண்டி (பொடித்தது)
இஞ்சி, பூண்டு விழுது – 1 மே.கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தே.கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
வெங்காயம் - 1/4 குவளை
தக்காளி - 1/4 குவளை
புதினா - 1 கைப்பிடி
தேங்காய்பால் - 1/4 குவளை
செய்முறை
- எண்ணெயை சூடாக்கி பட்டை, ஏலக்காய், கிராம்பு, பட்டை சோம்புப் பொடி, இஞ்சி பூண்டு விழுது முறையே சேர்த்து வதக்கவும். அதனுடன் புதினா, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்காளி மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் கழுவிய காளான், கழுவிக் கல்லரித்த பனிவரகு அரிசி, 2 குவளை நீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீரும், அரிசியும் ஒரே மட்டத்திற்கு வரும்போது தேங்காய் பால் சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் மூடிவைத்து பரிமாறவும்.
No comments:
Post a Comment