உணவுப் பழக்கம்கிறது வெறும் சாப்பாட்டோட முடியுறது இல்லை. அது பொருளாதாரத்தோட சம்பந்தப்பட்டது. ஒரு ஏக்கர் கரும்பு பயிரிட்டுக் கிடைக்குற சர்க்கரை இனிப்பைக் காட்டிலும் பத்து மடங்கு இனிப்பைத் தரும் ஒரு ஏக்கர் பனை. சர்க்கரை உடம்புக்குக் கெடுதின்னு சொல்லாத வைத்தியமே இல்லை. பனையோ சத்து. ஆனா, நம்மளோட அறியாமையால், தண்ணீரே தேவைப்படாத பனையை வெட்டிட்டு, தண்ணீரைக் குடிக்கிற கரும்பைச் சாகுபடி பண்ணிக்கிட்டு இருக்கோம். மண்ணுக்குஏத்த உணவுப் பழக்கம் மனுஷ உடம்புக்கு மட்டும் இல்லை; விவசாயத்துக்கும் வளர்ச்சியைத் தரும். இதை ரொம்ப சீக்கிரம் நம்ம மக்கள் புரிஞ்சுக்கிடுவாங்க. விதவிதமா சமைச்சுக் கொடுத்தா குழந்தைங்களும் மாறிடுவாங்க'' என்றார். தினை மாவு இனிப்பை நக்கி நக்கி, சப்புக்கொட்டித் தின்ற ஓசூர் சிறுவர்களைப் பார்த்தபோது பாமயனின் நம்பிக்கை பொய்க்காது என்றே தோன்றியது!
முக்கனிக் கூழ் @ ஒசூர்!
சமஸ்
படங்கள் : எம்.விஜயகுமார்
தமிழ்நாட்டில் இன்னமும் பல்லாயிரக்கணக்கான பழங்குடிகள் வாழ்கிறார்கள். அடர்ந்த காடுகளின் குகைகளில் வசிப்பவர்களில் தொடங்கி, மலையடிவாரக் கிராமங்களில் கான்கிரீட் கட்டடங்களில் வசிப்பவர்கள் வரை பல தளங்களில் இவர்கள் வாழ்கிறார்கள். ஆனால், வாழ்வியல் அடித்தளத்தைப் பொறுத்த அளவில் இவர்களிடையே நிறைய ஒற்றுமை களைப் பார்க்க முடியும். குறிப்பாக, உணவுப் பழக்கம்.
தான் வாழும் பகுதியில் எது விளைகிறதோ, அதுவே அவர்கள் உணவு. எல்லாக் காலகட்டத்துக்கும் ஒரே உணவு காட்டில் சாத்தியம் இல்லை. ஆகையால், பருவத் துக்கு ஏற்ப, விளைச்சலுக்கு ஏற்ப உணவும் மாறும். அடர் காடுகளில் வாழ்வோருக்கு, விவசாயத்தையே இன்னும் அறியாதவர் களுக்கு, கிழங்குகள்தான் பெரும்பாலும் உணவாக அமையும். நாள் முழுவதும் கிழங்கைத் தேடி அலைவார்கள். கிழங்கு இருக்கும் தடயம் அறிந்து மண்ணை வேக வேகமாகத் தோண்டுவார்கள். மேல் கிழங்கு தென்பட்டால், சாப்பிடுவார்கள்; அடிக் கிழங்கு தென்பட்டால் மண்ணை மூடிவிடுவார்கள். அடிக்கிழங்கு உயிர்க் கிழங்கு. அது பூமியின் சொத்து. மேல்கிழங்குக்கான உரிமை மட்டும்தான் நமக்கானது என்ற எண்ணம். இருட்டும் வரை தேடி அலைந்து பசியோடு திரும்பினாலும் அடிக்கிழங்கைத் தொட மாட்டார்கள். அதேபோல, கிடைப்பது ஒரே கிழங்கானாலும் அத்தனை பேருக்கும் அதில் பங்கு உண்டு. இயற்கையின் மடியில் அடிவரை சுரண்டித் தின்பது என்பதும் இன்னும் பத்து தலைமுறைக்குப் பதுக்கிவைப்பது என்பதும் அவர்கள் அறியாத நாகரிகம்.
இப்படி அவர்களிடம் இருந்து எதை எல்லாம் இன்றைய நவீன சமூகம் எடுத்துக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் இன்னமும் மறந்துவிடாத நம்முடையபாரம் பரிய உணவுகள் வாயிலாகச் சொன்னது விழா. தமிழ் அமைப்புகளைச் சேர்ந்ததோழர்கள் காலை முதலே குடும்ப சகிதமாக உழைத்துக்கொண்டு இருந்தார்கள். தோழர் கள் சந்தை சந்தையாக மீன், நாட்டுக் கோழி, ஆடு, வாத்து வாங்க அலைய... அவர் களுடைய மனைவியர் சமையலைக் கவனித்துக்கொண்டு இருந்தார்கள். இயக்குநர் 'பாலை’ செந்தமிழன் முன்னின்று எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். கணவனுக்கு ஏற்ப காலையில் இருந்து இரவு வரை தம் வீட்டு விசேஷம்போல் அவர் மனைவி காந்திமதியும் சமையல் வேலையே கதியாகக் கிடந்தது ஆச்சர்யம். மாலையில் விழா களைகட்டியது. ஓசூர்க்காரர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள்.
இயக்குநர் செந்தமிழனிடம் பேசினேன்.
விழாவுக்கு வந்திருந்த இயற்கை வேளாண் வல்லுநர் பாமயனிடம் பேசினேன்.
தினை மாவு இனிப்பை நக்கி நக்கி, சப்புக்கொட்டித் தின்ற ஓசூர் சிறுவர்களைப் பார்த்தபோது பாமயனின் நம்பிக்கை பொய்க்காது என்றே தோன்றியது!
தெம்பா சாப்பிடுங்க!
தினைத் தேன் உருண்டை: தினையைப் பொன்னிறத்தில் வறுத்து, மாவாக்கி அதில் கருப்பட்டி அல்லது வெல்லப்பாகு, கொஞ்சம் தேன், வாசனைக்கு ஏலக்காய் சேர்த்துப் பிசைந்து சிறுகேழ்வரகுக் கூழ்: கேழ்வரகை முந்தைய நாளே முளைகட்டிவைத்து, வெயிலில் உலர்த்தி, அரைத்து மாவாக்கி, அந்த மாவைத் தண்ணீரில் கொதிக்கவைத்து இறக்கி, மோர் சேர்த்து சின்ன வெங்காயம், மல்லித் தழை தூவினால் ஊட்டச்சத்து மிக்க காலை உணவு தயார்.
கொள்ளு ரசம்: கொள்ளைக் குழைய வேகவைத்து வடிகட்டினால் கிடைக்கும் நீரில், தக்காளி, மிளகு, சீரகம் சேர்த்து வைக்கப்படும் ரசம். கொழுப்பைக் கரைக்கும்.
கறிவேப்பிலைப் பழரசம்: கறிவேப்பிலையுடன் தேங்காய் சேர்த்து, இரண்டையும் அரைத்து எடுத்த பாலில் கருப்பட்டி, ஏலக்காய் சேர்த்தால், சத்து மிக்க உடனடி பானம் தயார்
No comments:
Post a Comment