மகோகனி ரோஸ்வுட் குமிழ்
மகோகனி ரோஸ்வுட் குமிழ்-Thanks to Vikatn Group
மணல்சாரியிலும், மகத்தான வளர்ச்சி... மரம் வளர்ப்பில் புதிய முயற்சி!
கு.ராமகிருஷ்ணன்
படங்கள்: கே. குணசீலன்
இந்த மண்ணில், இந்த மரங்கள்தான் வளரும். மற்ற மரங்கள் வளராது’ என்கிற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் பரவலாக உள்ளது. ஆனால், ''எந்த மண்ணாக இருந்தாலும், கவலையில்லை. சில தொழில்நுட்பங்கள் மூலம் நாம் விரும்பும் எல்லா மரங்களையும் வளர்க்க முடியும்'’ என்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலூகா, காந்தாவனம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி.
ஐந்தடி ஆழம் வரை முழுக்க மணலாகவே இருக்கிறது, இவருடைய நிலம். 'மணற்பாங்கான நிலத்தில் பனை, சவுக்கு, முந்திரி போன்ற சிலவகை மரங்கள் மட்டுமே சிறப்பாக விளையும்' என்பார்கள். ஆனால், இந்த மண்ணிலும் குமிழ், மகோகனி, ரோஸ்வுட், வேங்கை, செஞ்சந்தனம், பலா போன்ற மரங்களை வளர்த்து, ஆச்சர்யப்பட வைக்கிறார் ராமமூர்த்தி!
இது எப்படி சாத்தியமானது..?
''எனக்கு... இந்த இடத்துல 4 ஏக்கர், இன்னொரு இடத்துல 5 ஏக்கர்னு மொத்தம் 9 ஏக்கர் நிலம் இருக்கு. அந்த 5 ஏக்கர் நிலம்... நல்ல வளமான நிலம். அதுல நெல் சாகுபடி செய்றேன். இந்த நாலு ஏக்கர்லதான் மரம் வளர்க்குறேன். இதுல கொஞ்சம்கூட மண்ணே கிடையாது. முழுக்க மணல்தான். உளுந்து, கடலை, தைலமரங்கள்னு சாகுபடி செஞ்சு பார்த்தேன். எதுவுமே சரியா வரல. களைச்செடியான வெடி துவரைதான் அதிகமா மண்டும். ஆனா, இந்த மண்ணுல மகோகனி, ரோஸ்வுட், வேங்கை மாதிரியான மரங்களை சாகுபடி செய்யணும்னு எனக்கு ஆசை.
''ஒரு ஏக்கருக்கு 500 ஆடுகளைக் கொண்டு, மூன்று நாள் கிடை போட வேண்டும். பிறகு, இரண்டு சால் உழவு ஓட்டி, ஏக்கருக்கு 10 டன் வீதம் மாட்டு எருவைப் போட்டு, மறுபடியும் 3 சால் உழவு ஓட்ட வேண்டும். 6 அடி இடைவெளியில் 2 கன அடி அளவில் குழிகளை எடுத்து, ஒவ்வொரு குழியிலும் தலா
10 கிலோ எருவைக் கொட்டி, குழியில் உள்ள மணலோடு சேர்த்து நன்றாகக் கிளறிவிட வேண்டும்.
1,200 கன்றுகள் வரை நடலாம். நடவுக்குப் பிறகு, வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஓராண்டுக்குப் பிறகு, நிலத்தின் ஈரத்தன்மைக்கு ஏற்ப தண்ணீரின் அளவைக் கூட்டி குறைத்துக் கொள்ளலாம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை களைச்செடிகளை வேரோடு பெயர்த்து, புரட்டிப் போட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் தரையை நன்கு கொத்தி, 10 கிலோ எரு போட வேண்டும்''
சாகுபடிப் பாடம் முடித்த ராமமூர்த்தி, சில முக்கியமான தகவல்களையும் பகிர்ந்தார். ''சற்று மேடாக இருக்கக் கூடிய 3 ஏக்கர் 40 சென்ட் பரப்புலதான் மகோகனி, வேங்கை உள்ளிட்ட மரங்களை நடவு செய்திருக்கேன். இதிலிருந்து ஒன்றரையடி பள்ளமா இருக்கக்கூடிய 30 சென்ட் பரப்புல முள் இல்லா மூங்கிலை தனியா சாகுபடி செஞ்சுருக்கேன். முள் இல்லா மூங்கில், குறைஞ்ச தண்ணியிலயும் தாக்குப் புடிச்சு வளரும். மூணடி பள்ளத்துல இருக்கக் கூடிய இன்னொரு 30 சென்ட்லயும் முள் இல்லா மூங்கில்தான் சாகுபடி செஞ்சுருந்தேன். அதிக பள்ளமா இருந்ததுனால, மழை தண்ணி தேங்கி, கன்னு அழுகிப் போயிடுச்சு.
''இதுமாதிரி, பல வகையான மரங்களை சாகுபடி செய்றதுனால, வெவ்வேறு காலகட்டங்கள்ல, தொடர்ச்சியா வருமானம் கிடைக்கும். இதுமட்டுமில்லாம, பல்லுயிர் பெருக்கமும் சிறப்பா நடக்கும். இதனால் பூச்சி, நோய்த் தாக்குதல் அதிகம் இல்லாம, மரங்கள் திடகாத்திரமா வளரும்'' என்றார், சந்தோஷமாக!
No comments:
Post a Comment