வடிகரைசல்!
பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், ஜீவாமிர்தம் ஆகிய கரைசல்களைத் தயார் செய்து பயன்படுத்தும் ஃபெலிக்ஸ், 'வடிகரைசல்’ என்ற பெயரில் ஒரு கரைசலைத் தயார் செய்து பயன்படுத்துகிறார்.

ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் ஆட்டுப்புழுக்கை, மாட்டுச்சாணம், எருக்கு, நொச்சி, களைச்செடிகளை வெட்டிப் போட வேண்டும். பிறகு, ஆலமரம், அரசமரத் தடியில் கிடக்கும் மண்ணை எடுத்து, இரண்டு நாட்கள் நீரில் ஊற்றி வடிகட்டி, கரைசலை மட்டும் டிரம்மில் சேர்க்க வேண்டும் (ஆல், அரச மரங்களில் அதிக பறவைகள் வருவதால், அவற்றின் எச்சம் மரத்தடியில் அதிகம் படிந்து காய்ந்திருக்கும். இந்த மண்ணை வடிகட்டும்போது, எச்சம் கரைந்து கரைசலாகக் கிடைக்கும்). இதற்கு அளவு ஏதும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம். இதனுடன் கெட்டுப்போன பால், தயிர் எதுவேண்டுமானாலும் ஊற்றலாம்.
டிரம் முழுவதும் கலவையால் நிறைந்ததும், 30 நாளில் நொதித்து வடிகரைசல் உருவாகிவிடும். டிரம்மின் அடியில் பைப் அமைத்து இதை சேகரித்துக் கொள்ளலாம். இந்தக் கரைசலை 1:15 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து உரமாகவும், 1:8 என்ற விகிதத்தில் பூச்சிவிரட்டியாகவும் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment